கிளிநொச்சி கனகபுரம் உட்கட்டமைப்பு வீதி இன்று மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றது.
பெருந்தெருக்கள் அமைச்சின் கிராமிய மற்றும் அதிதியாவசிய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் 48.51 மில்லியன் ரூபாவில் அமைக்கப்பட்ட 1 கிலோமீட்டர் காபெற் வீதியே இவ்வாறு இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது.
வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்ட குறித்த வீதியானது கரைச்சி பிரதேச சபைக்கு சொந்தமானதாகும். குறித்த அபிவிருத்தி செய்யப்பட்ட வீதியை இன்றைய தினம் முன்னாள் வடக்குமாகாண சபை உறுப்பினர் வை.தவநாதன் திறந்து வைத்தார்.
நாடளாவிய ரீதியில் கிராமிய வீதிகள் புனரமைக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் நிகழ்வுகள் ஜனாதிபதி கோட்டபாஜ ராஜபக்ச தலைமையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1