கிளிநொச்சியில் ஐ ரோட் திட்டத்தில் புனரமைக்கப்பட்ட வீதிகளை அரசின் திட்டமாக திறந்து வைத்துள்ளனர்: கரைச்சி தவிசாளர் காட்டம்!

Date:

கிளிநொச்சியில் உலக வங்கியின் நிதியுதவியில் ஐ ரோட் திட்டத்தில் புனரமைக்கப்பட்ட வீதிகளை, அரசாங்கத்தின் ஒரு இலட்சம் கிலோ மீற்றர் திட்டத்தின் கீழ், அரச தரப்பினர் திறந்து வைத்துள்ளனர். இது மக்களை ஏமாற்றும் செயல் என கரைச்சி பிரதேச சபை தவிசாளர் வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார்.

இன்று இலங்கை பூராகவும் தேசிய நிழ்ச்சித்திட்டமாக ஒரு இலட்சம் கிலோமீட்டர் நீளமான கிராமிய வீதிகளை புனரமைத்து திறந்து வைக்கும் நிகழ்வு நாடு தழுவிய ரீதியில் இடம்பெறுகின்றது.

இலங்கை தீவிலே இருக்கின்ற 25 மாவட்டங்களிலும் இந்த தேசிய நிகழ்ச்சித்திட்டம் இன்று பிற்பகல் 3 மணிக்கு சம நேரத்திலே ஏற்பாடு செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டிருக்கின்றது.

கிளிநொச்சியைப் பொறுத்தவரையில் இன்று திறந்து வைக்கப்பட்டிருக்கின்ற வீதியானது பிரதேச சபைக்கு சொந்தமான வீதி. இந்த பிரதேச சபைக்கு சொந்தமான வீதியை நாங்கள் கடந்த நான்கு ஆண்டுகளிற்கு முன்பு ஐ திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படுகின்ற பொழுது உலக வங்கியின் நிதியுதவியோடு மேற்கொள்ளுவதற்காக நாங்கள் கையளித்து, குறித்த வீதி ஐ திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டு இப்பொழுது நிறைவு செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதுவரை குறித்த வீதி பிரதேச சபையிடம் ஒப்படைப்பு செய்யப்படவில்லை.

ஆனால், இன்று அந்த வீதி, வீதி அபிவிருத்தி அதிகார சபையினாலே திறந்து வைக்கப்பட்டிருக்கின்றது. இது எங்களைப் பொறுத்தவரையில் கவலை தருகின்ற விடயம். ஒரு இலட்சம் கிலோ மீட்டர் வீதிகளை புனரமைப்பதற்கான நிகழ்ச்சித்திட்டம் கடந்த 10 மாதங்களிற்கு முன்பு கிளிநொச்சியிலே ஆரம்பிக்கப்பட்டு, பாரதிபுரம் செபஸ்ரியார் வீதி, சக்திபுரம், எள்ளுக்காடு போன்ற வீதிகள் உட்பட 16 வீதிகளிற்கு பெயர்ப்பலகை இடப்பட்டதுடன், அடிக்கற்களும் நாட்டப்பட்டிருந்தது.

அந்த பெயர் பலகையிலே இலங்கையின் முக்கியமான அமைச்சர்களின் படங்கள் பொறிக்கப்பட்டு அபிவிருத்தி தொடர்பான விபரங்களுடன் இன்றும் இருக்கின்றது. ஆனால் இன்றுவரை அந்த 16 வீதிகளும் ஒரு அடிகூட புனரமைக்கப்படாத நிலை காணப்படுகின்ற பொழுது, அந்த வீதிக்கு பதிலாக தேசிய நிகழ்ச்சித்திட்டம் ஒன்றிலே வீதி திறந்து காட்டியிருப்பது எங்களுடைய மக்களை ஏமாற்றுகின்ற செயல். அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக இருக்கின்ற எங்களுடைய மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் இந்த விடயத்திலே கரிசணை கொள்ளாதது மிகுந்த கவலையை தருகின்றது.

அவருடைய பிரதிநிதிகள் இந்த நிகழ்விலே கலந்துகொண்டிருக்கின்றார்கள். உண்மையில் அமைச்சரவை அந்தஸ்துள்ள ஒரு அமைச்சர், தன்னுடைய அமைச்சரவையையும், தான் சார்ந்திருக்கின்ற பிரதம அமைச்சரையும் , எங்களுடைய நாட்டின் கௌரவ ஜனாதிபதியையும் அவமானப்படுத்திய செயலாகவே நான் பார்க்கின்றேன்.

ஜனாதிபதியினாலே மக்கள் நலன் கருதி கொண்டுவரப்பட்ட ஒரு இலட்சம் கிலோமீட்டர் வேலைத்திட்டம் கிளிநொச்சியிலும், முல்லைத்தீவிலும் ஒரு அடிகூட மேற்கொள்ளப்படாத பொழுது, அவ்வாறு மேற்கொள்ளப்பட்டதாக காண்பித்து தங்களுடைய செல்வாக்க மக்களிடத்தில் நிமிர்த்திக்கொள்ள எடுத்த இந்த முயற்சியை கரைச்சி பிரதேச சபை கண்டிக்கின்றது.

ஏனெனில் குறித்த வீதி எங்களுக்கு சொந்தமானது. இங்கு நடைபெற்றிருப்பது ஒரு ஏமாற்று செயல். எங்களுடைய பொதுமக்கள் ஏமாற்றப்பட்டிருக்கின்றார்கள். ஐ ரோட் வேலைத்திட்டம் ஒருலட்சம் வீதி புனரமைப்பாக மாற்றி எமது மக்களை ஏமாற்றியிருக்கின்றார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

இலங்கையில் சீன சைபர் மோசடிக் கும்பல்களை விசாரிக்க அமெரிக்க FBI குழு வருகை!

இலங்கையில் தங்கியிருந்து சீனப் பிரஜைகளால் நடத்தப்படும் சைபர் மோசடி மையங்கள் தொடர்பான...

கொழும்பில் அபாயகரமான நிலையை எட்டிய காற்று மாசுபாடு! AQI 178 ஆக உயர்வு

கொழும்பில் நேற்று (நவம்பர் 17) காலை காற்று மாசுபாட்டின் அளவு ஆரோக்கியத்திற்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்