25.3 C
Jaffna
January 16, 2025
Pagetamil
இலங்கை

விக்னேஸ்வரன் சொன்னதை மட்டும் செய்ய வேண்டும்!

சி.வி.விக்கினேஸ்வரன் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் சர்வஜன வாக்கெடுப்பு கோரினார். இப்போது சர்வஜன வாக்கெடுப்பை கைவிட்டு சமஷ்டி நிலை கேட்கிறார். தமிழர்களை குழப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். அரசியல் தீர்வுக்கான வாக்கெடுப்பு என்ற தேர்தல் வாக்குறுதியுடன் அவர் நிலைத்திருக்க வேண்டும் என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் ஊடகங்களுக்கு நேற்று (04) கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

காணாமல் ஆக்கப்பட்ட எமது தமிழ் குழந்தைகளை மீட்பதற்கான எமது தொடர் போராட்டம் இன்று 1722 ஆவது நாளாகும். இன்று நரகாசூரனை வதம் செய்த தீபாவளி திரு நாள். ஆனால் இன்று நம்மைச் சுற்றி நரகாசூரன்கள் பலர் இருக்கிறார்கள்.

ஐசிசி தமிழர்களின் இனப்படுகொலை வழக்கை பரிசீலித்து வருகின்ற இந்நேரத்தில், தமிழர்கள் சரியான நேரத்திற்காக காத்திருக்க வேண்டும். நாம் உலகை நோக்கும் போது, இனப்படுகொலையாளிகள் மீது சர்வதேச குற்றங்கள் சுமத்தப்படும் போது, பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள் விரும்பியவாறு அரசியல் உரிமைகளை கோர முடிந்தது. தென் சூடான், கிழக்கு தீமோர், போஸ்னியா மற்றும் இனப் போர் நடந்த பிற நாடுகளில் இவைகள் நடந்தன.

சி.வி.விக்கினேஸ்வரன் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் சர்வஜன வாக்கெடுப்பு கோரினார். இப்போது சர்வஜன வாக்கெடுப்பை கைவிட்டு சமஷ்டி நிலை கேட்கிறார். தமிழர்களை குழப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். அரசியல் தீர்வுக்கான வாக்கெடுப்பு என்ற தேர்தல் வாக்குறுதியுடன் அவர் நிலைத்திருக்க வேண்டும். இனப்படுகொலைகள் மீண்டும் நிகழாமல் தமிழர்களைப் பாதுகாப்பது இந்த தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களின் கடமை.

1958, 1960, 1977, 1983 மற்றும் 2009 போன்ற தொடர் நிகழ்வுகளை சிங்களத்தின் அடக்குமுறை மற்றும் ஆக்கிரமிப்புகளுடன் நிறுத்துவதே தமிழ் மக்களுக்குத் தேவை. தமிழர்களைப் பாதுகாக்க, இலங்கை அரசால் திரும்பப் பெற முடியாத பாதுகாப்பான மற்றும் பாதுகாக்கப்பட்ட வடக்கு- கிழக்கு இணைந்த தமிழர் தாயகம் தேவை.

யாழ்ப்பாணத்தில் கட்சிகள் ஒன்று கூடி 13வது திருத்தத்தை அமுல்படுத்துமாறு இந்தியாவை வலியுறுத்தினர். கடந்த 34 ஆண்டுகளாக இலங்கையின் 13வது திருத்தத்தை அமுல்படுத்துமாறு இந்தியா இலங்கையை வற்புறுத்தவில்லை என்பதை இந்தக் கட்சிகள் அறிந்து கொள்ள வேண்டும். இலங்கையை 13ஐ நடைமுறைப்படுத்துமாறு இந்தியா ஒரு போதும் வற்புறுத்தாது.

1987 இல் இந்த 13வது திருத்தம் அமிர்தலிங்கம் மற்றும் சம்பந்தரால் நிராகரிக்கப்பட்டது. ’13ஏ சட்டமூலமும் மாகாண சபை சட்டமூலமும் தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யவில்லை’ என்பதே அவர்கள் கூறிய காரணம்.

13வது திருத்தம் ஒற்றையாட்சி அரசின் கீழ் உள்ளது. அது தமிழர்களைப் பாதுகாக்காது. இந்த தமிழ் கட்சிகள் தாம் ஆட்சியில் அமர்வதற்காக எம்மை ஏமாற்றுகின்றன அல்லது மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முயற்சிக்கின்றன. 13வது திருத்தச் சட்டம் தமிழர்களை மேலும் பாதிப்படையச் செய்யும்.

இந்த அரசியல் வாதிகள் இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஐ.நா ஆகிய நாடுகளுக்கு தமிழர்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளக்கூடிய ஒரே வழி, மீளப்பெற முடியாத பாதுகாப்பான மற்றும் பாதுகாக்கப்பட்ட வடக்கு- கிழக்கு இணைந்த தமிழர் தாயகம் தேவை என கேக்க வேண்டும். 13 வது திருத்தச் சட்டம் சிங்கள அடக்குமுறை மற்றும் ஆக்கிரமிப்பிலிருந்து எம்மைப் பாதுகாக்காது என்பதை இந்த கட்சிகளுக்குச் சொல்ல விரும்புகின்றோம்.

ஐசிசி எங்கள் வழக்கைப் பார்க்கும் வேளை, இது ஒரு நல்ல நேரம். மீண்டும் மீண்டும் நடக்கும் இனப்படுகொலையில் இருந்து சரியான பாதுகாப்பைப் வலுவான தீர்வை கேட்க்கும் நேரம், அதாவது வாக்கெடுப்பை கேளுங்கள் எனத் தெரிவித்தார்.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சாலை விதியை மீறிய பஸ் ஓட்டம் – விபத்தில் 11 பேர் காயம்

east tamil

மல்லாவியில் தீவைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்

Pagetamil

இலங்கைத்தமிழர் விவகாரத்தில் இந்திய மத்திய அரசின் அக்கறை குறைகிறதா?- எம்.ஏ.சுமந்திரன்

Pagetamil

இந்திய உயர் ஸ்தானிகர் – நாமல் ராஜபக்ச முக்கிய பேச்சுவார்த்தை

east tamil

மல்வத்து ஒயாவில் காணாமலான இளைஞன் – தேடுதல் நிறுத்தம்

east tamil

Leave a Comment