சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அண்மித்த குப்பை மேட்டில் பயணப் பையில் காணப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது.
சடலம் தற்போது ராகம போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பெண்ணை அடையாளம் காண சப்புகஸ்கந்த பொலிஸாரினால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், களனி குற்றத்தடுப்பு பிரிவினர் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் நேற்று தெரிவித்திருந்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1