திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உல்பத்வெவ பகுதியில் வீடொன்றில் இருந்து ஆணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
இச் சடலம் இன்று (04) காலை மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த டபிள்யூ.ஏ.நளீன் சமிந்த (40வயது) எனவும் பொலிசார் தெரிவித்தனர்.
இரண்டு திருமணம் முடித்த நிலையில் அவர் இரண்டாவது மனைவியுடன் தனியாக வீட்டில் வசித்து வந்ததாகவும் இவ்வாறு உயிரிழந்த நபர் கடந்த இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னரே உயிரிழந்திருந்திருக்கலாம் எனவும் பொலிசார் சந்தேகம் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் தற்பொழுது சம்பவ வீட்டில் இருப்பதாகவும் இவர் தொடர்பில் ஏற்கனவே பாலியல் துஷ்பிரயோகம் வழக்கு இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
ஆனாலும் குறித்த சடலத்தை நீதவான் பார்வையிட்டதுடன் சட்ட வைத்திய அறிக்கைக்காக கந்தளாய் பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது