இளைஞர்கள் தடுப்பூசி சலுத்தாதது எதிர்காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தலாம்!

Date:

சில விடயங்களில் தேவையான கவனம் செலுத்தப்படாததால், நாட்டில் COVID-19 நிலைமை மீண்டும் கட்டுப்பாட்டை மீறக்கூடும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.

பொதுப் போக்குவரத்தில் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றாதது, நெகிழ்வான வேலை நேரம் மற்றும் கணிசமான எண்ணிக்கையிலான இளைஞர்கள் தடுப்பூசியைப் பெறாதது ஆகியவை தீவிரமான மற்றும் உடனடி கவனம் தேவைப்படும் சில முக்கிய காரணிகள் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவித்த அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உதவி செயலாளர் டொக்டர் நவீன் டி சொய்சா, தற்போது போதிய பஸ்கள் மற்றும் புகையிரதங்கள் சேவையில் ஈடுபடுத்தப்படாத நிலையில் பொதுமக்களை குறை கூற முடியாது. நெரிசலை விளைவித்த நெகிழ்வான வேலை நேரங்களை அறிமுகப்படுத்த நிறுவனங்களும் தயாராக இல்லை என்றார்.

COVID-19 க்கு எதிராக இளைஞர்கள் தடுப்பூசி போட மறுப்பது நாட்டின் எதிர்காலத்தைப் பாதிக்கும் ஒரு கவலைக்குரிய வளர்ச்சியாகும் என்றும்  வலியுறுத்தினார்.

நாட்டில் இன்னொரு அலை எழுந்தால், மக்கள் பெரும் பொருளாதார நெருக்கடி மற்றும் சமூகப் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றார்.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவ பாதுகாப்பு மோட்டார்சைக்கிள் இராணுவ ரோந்து நடவடிக்கையடுத்து – பரபரப்பு

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பொலிசார் இணைந்து...

சம்மாந்துறையில் கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு : போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்த மாடுகளுக்கு எதிராக பிரதேச சபை – பொலிஸார் இணைந்து நடவடிக்கை

பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்து, தொடர்ச்சியாக வீதி விபத்துகளுக்கும் விவசாயப் பயிர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்