இன்று முதல் நீண்ட தூர புகையிரதங்கள் சேவையில் இணைக்கப்படும்.
கோவிட்-19 நெருக்கடியின் காரணமாக பல வாரங்களாக சேவைகள் நிறுத்தப்பட்ட பின்னர் குறைந்த எண்ணிக்கையிலான புகையிரதங்கள் கடந்த வாரம் முதல் இயங்கத் தொடங்கின.
அதன்படி இன்று, நாளை மற்றும் திங்கட்கிழமை கட்டம்கட்டமாக மேலும் பல புகையிரதங்கள் இயக்கப்படும் என இலங்கை புகையிரதம் தெரிவித்துள்ளது.
கொழும்பு கோட்டை மற்றும் மாத்தறை, கண்டி மற்றும் காங்கேசன்துறை நிலையங்களுக்கு இடையில் நான்கு அதிவேக புகையிரதங்களும் ஆறு இன்டர்சிட்டி புகையிரதங்களும் சேவையில் ஈடுபடவுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.




