சீனிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையை நீக்க தீர்மானித்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கும் சீனி இறக்குமதியாளர்களுக்கும் இடையில் இன்று (2) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நுகர்வோருக்கு சீனி தட்டுப்பாடின்றி கிடைக்க இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது.
சீனி கட்டுப்பாட்டு விலையை நீக்குவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நாளை (3) வெளியிடப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அதன்படி, ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் மொத்த விலையாக 140 ரூபாயும் சில்லறை விலை 150 ரூபாயாகவும் நாளை முதல் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது.




