கொவிட்-19 தொடர்பான ஜனாதிபதி செயலணி இன்று கூடும் போது மாகாணங்களுக்கிடையிலான புகையிரத சேவைகள் தொடர்பான இறுதித் தீர்மானம் எட்டப்படும்.
பயணிகளுக்கு புகையித டிக்கெட்டுகளை வழங்குவதற்கான கோரிக்கை குறித்தும் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்படும் என இலங்கை புகையித திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கான அனுமதி வழங்கப்படும் என திணைக்களத்தின் பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
சீசன் டிக்கெட் வைத்திருப்பவர்களை மட்டுமே புகையிதத்தில் பயணிக்க அனுமதிப்பது என்ற முடிவு கோவிட் செயலணியினால் எட்டப்பட்டதாகவும், இந்த முடிவை திருத்தும் அதிகாரம் குழுவுக்கு மட்டுமே உள்ளதாகவும் ஜெயசுந்தர கூறினார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1