30 சதவீதமான உள்ளூர் பெறுமதியுடன், முதல் முறையாக உள்நாட்டில் பொருத்தப்பட்ட Bolero City Pik-up ஜீப் ரக வாகனம் ஒன்று சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மத்துகம – வெலிபன்ன பகுதியில் உள்ள வாகன ஒருங்கிணைப்பு மையத்தில், கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ஸ தலைமையில் நேற்று முன்தினம் (26) இந்த நிகழ்வு இடம்பெற்றது.
நிலையான இயக்க நடைமுறைகள் எனப்படும் எஸ்.ஓ.பி முறைமை அறிமுகத்துடன், இலங்கையில் வாகன ஒருங்கிணைப்பு கைத்தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், தங்களது உள்ளூர் பெறுமதி சேர்ப்பை அதிகரித்துள்ளதாக அமைச்சர் விமல் வீரவன்ஸ குறிப்பிட்டுள்ளார்.




