26.3 C
Jaffna
March 3, 2025
Pagetamil
சினிமா சின்னத்திரை

அடுத்த கண்மணி இவரா?

விஜய் டிவியில் வித்தியாசமாகவும், விறுவிறுப்புடனும் ஒளிபரப்பாகி வருகிறது  பாரதிகண்ணம்மா சீரியல். இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, டிஆர்பி ரேட்டிங்கிளும் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

இதில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகை ரோஷினி.

இவர் தீடீரென இந்த சீரியலில் இருந்து விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ரோஷினிக்கு திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்து இருப்பதாக கூறப்படுகிறது.

பாரதிகண்ணம்மா சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தை கருப்புநிற கதாநாயகியாகவும், அதே சமயத்தில் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணாகவும் வடிவமைத்துள்ளனர். கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ரோஷினி, ரசிகர்கள் மத்தியில் கண்ணம்மாவாகவே வாழ்ந்து வருகிறார்.

தற்போது இவர் விலகுவதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இவருக்கு பதிலாக கண்ணம்மா கதாபாத்திரத்தில் யாரை நடிக்க வைப்பது என்று பாரதி கண்ணம்மா குழுவினர் குழப்பமடைந்துள்ளனர். இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமான நடிகையை வலை வீசி தேடி வருகின்றனர்.

அண்மையில் கண்ணம்மா கதாபாத்திரத்தில், யாரடி நீ மோகினி சீரியலில் வெண்ணிலா கதாபாத்திரத்தில் நடித்த நடிகை நட்சத்ராவை நடிக்க வைக்க முடிவு செய்ததாக தகவல்கள் வெளியாகியது. ஆனால் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் தற்போது வரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வினிஷா தேவி என்கின்ற நடிகையை கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு தேர்வு செய்துள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.

கண்ணம்மா கதாபாத்திரத்தில் நட்சத்ரா நடிக்க உள்ளதாக கிடைத்த தகவலை தொடர்ந்து தற்போது வினிஷா தேவி என்று மாற்றம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர். கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடிக்கப் போவது யார்? என்பது குறித்து பல தகவல்கள் வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஒஸ்கர் 2025: விருதுகளைக் குவித்த ட்யூன் 2, அனோரா, தி ப்ரூட்டலிஸ்ட்

Pagetamil

விஜய் சாதனையை முறியடித்த அஜித்!

Pagetamil

‘டிராகன்’ 3 நாள் வசூல் ரூ.50 கோடி – அதிகாரபூர்வ அறிவிப்பு

Pagetamil

திவ்யபாரதி உடன் டேட்டிங்கா? – ஜி.வி.பிரகாஷ் மறுப்பு

Pagetamil

“வாய்ப்பு கொடுக்காமல் ஒதுக்கினார்கள்” – பார்வதி வருத்தம்

Pagetamil

Leave a Comment