மறுமலர்ச்சி 2- நாயகனாக ராஜ்கிரண் ஒப்பந்தம்

Date:

‘மறுமலர்ச்சி 2’ படத்தின் நாயகனாக நடிக்க ராஜ்கிரண் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

பாரதி இயக்கத்தில் மம்மூட்டி, தேவயானி, ரஞ்சித் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் மறுமலர்ச்சி. 1998ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதற்கு ஒளிப்பதிவாளராக தங்கர் பச்சான், இசையமைப்பாளராக எஸ்.ஏ.ராஜ்குமார் ஆகியோர் பணிபுரிந்தனர்.

தற்போது மறுமலர்ச்சி 2 படத்தை இயக்கவுள்ளார் பாரதி. இதனை க்ரவுட் பண்டிங் முறையில் தயாரிக்கவுள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இதன் பணிகள் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தன.

தற்போது இந்தப் படத்தில் கதிர்வேல் படையாச்சியார் என்ற கதாபாத்திரத்தில் நாயகனாக நடிக்க ராஜ்கிரண் ஒப்பந்தமாகியுள்ளார். இதனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் இயக்குநர் பாரதி. மேலும், சோழன் என்ற கதாபாத்திரத்தில் ராஜ்கிரண் மகனாக நடிக்க முன்னணி நாயகனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

மறுமலர்ச்சி 2 படத்துக்கு எஸ்.ஏ.ராஜ்குமார் இசையமைப்பாளராகப் பணிபுரியவுள்ளார். ஏற்கெனவே, “படை படை படையாச்சிடா” என்ற பாடலை உருவாக்கி, படக்குழு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அசாத் மௌலானாவிடம் வாக்குமூலம் பதிவு!

தற்போது பிரான்ஸில் உள்ள அசாத் மௌலானாவிடம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்...

யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவது புலிகளை மகிமைப்படுத்துவதாக அமையக்கூடாது!

இலங்கையில் போரினால் உயிரிழந்த பொதுமக்களின் நினைவுகூறுதலில் ஒரு சமச்சீரான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க...

ஈரானின் புதிய தலைவராக்குவதற்காகவே முன்னாள் ஜனாதிபதியின் வீட்டின் மீது தாக்குதல்: இஸ்ரேல், அமெரிக்க திட்டம் பிசுபிசுத்தது!

போரின் தொடக்கத்தில், ஈரானின் முன்னாள் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதி நெஜாத்தின் தெஹ்ரான்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்