தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இளையரசனேந்தல் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு மருத்துவராக பணியாற்றி வருகிறார் குருசாமி. இவர் அதே பகுதியில் ஸ்ரீ முத்தையா கிளினிக் என்று தனியாக மருத்துவமனை நடத்தி வருகின்றார்.
இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வரும் பெண்தூய்மைப் பணியாளர் ஒருவருடன் இவருக்கு அடிக்கடி உல்லாசமாக இருந்து வருகிறார். பணி நேரத்தில் பெண் ஒருவருடன் உல்லாசமாக இருப்பதால் அந்த நேரத்தில் நோயாளிகள் யாரும் வந்து விடக்கூடாது என்பதற்காக நோயாளிகள் வந்தால் அவர்களை உள்ளே விடாமல் வெளியே நிறுத்தி வைப்பதற்காக இன்னொரு பெண் ஊழியரை வாசலில் காவலுக்கு வைத்து வந்திருக்கிறார்.
இதனால் கொதித்தெழுந்த அந்தப் பெண் ஊழியர் நீலவேணி, பணி நேரத்தில் மருத்துவர் குருசாமி பெண் ஊழியருடன் உல்லாசமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் நோயாளிகள் யாரும் வந்துவிட்டால் அவர்களை உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தி வைப்பதற்காக தன்னை வாசலில் பாதுகாத்துக்கொண்டு நிற்குமாறு சொல்லி மன உளைச்சலை ஏற்படுத்தி வருகிறார் குருசாமி என்று கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
பெண் ஊழியருடன் குருசாமி உல்லாசமாக இருக்கும் வீடியோவை போலீசிடம் சமர்ப்பித்திருக்கிறார். வெறும் புகார் கொடுத்திருந்தால் அது பொய் புகார் என்று குருசாமி தப்பித்து விடுவார் என்பதால் தான் அவர் குறித்த ஆதாரத்துடன் புகார் கொடுத்திருக்கிறார் நீலவேணி. மேலும் நீலவேணி அவதூறாக பேசியதாக இதுபற்றி யாரிடமும் சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்றும் குருசாமி மிரட்டியதாக நீலவேணிதெரிவித்திருக்கிறார்.
தான் உல்லாசமாக இருந்த வீடியோவை நீலவேணி எடுத்து வைத்திருந்ததாக தெரிந்துகொண்ட குருசாமி நீலவேணியின் செல்போனையும் பறித்து கொண்டிருக்கிறார் . இதனிடையே அவதூறாக பேசுதல் செல்போனை பறித்தல் , கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் குருசாமி மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.