யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று 180 பேரின் மாதிரிகள் சோதனையிடப்பட்டன. இதில் 25 பேருக்கு தொற்று உறுதியானது.
யாழ் மாவட்டத்தில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் 2 பேர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 4 பேர் என, 6 பேருக்கு தொற்று உறுதியானது. சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் தொற்றுடன் அடையளம் காணப்பட்டவர்களில் ஒருவர், வீட்டிலேயே உயிரிழந்த 79 வயதான முதியவர்.
வவுனியா மாவட்டத்தில், வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 15 பேருக்கு தொற்று உறுதியானது. இதில் 42 வயதான தாயும், 17 வயதான மகளும், பிறிதொரு குடும்பத்தில் 30 வயதான தாயும், 13, 10, 5 வயதுடைய பிள்ளைகளும் தொற்றிற்குள்ளாகினர்.
வீட்டில் உயிரிழந்த 73 வயதான ஆணொருவருக்கும் தொற்று உறுதியானது. வவுனியா மாவட்டத்தில் 16 பேருக்கு தொற்று உறுதியானது.
மன்னார் பொது வைத்தியசாலையில் 3 பேருக்கு தொற்று உறுதியானது.
இதேவேளை, யாழ் மாவட்டத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் சோதனைகளில் 21 பேருக்கு தொற்று உறுதியானது.
வீனஸ் தனியார் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஒருவருக்கு தொற்று உறுதியானது.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 3 பேருக்கு தொற்று உறுதியானது.
யாழ் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சுதுமலை தெற்கை சேர்ந்த ஒருவருக்கு தொற்று உறுதியானது.
சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 7 பேருக்கு தொற்று உறுதியானது.
கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 5 பேருக்கு தொற்று உறுதியானது.
உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேருக்கு தொற்று உறுதியானது.
ஊர்காவற்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவருக்கு தொற்று உறுதியானது.