ஐசிசி ரி20 உலகக்கிண்ண போட்டித் தொடரின் சூப்பர் 12 சுற்றின் முதலாவது போட்டியில் அவுஸ்திரேலியா அணி 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் தென்னாபிரிக்காவை வீழ்த்தியது.
நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 118 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
அவ்வணி சார்பில் மார்க்ரம் 40, ரபாடா 19, மில்லர் 16 ஓட்டங்களைப் பெற்றனர்.
பந்து வீச்சில் ஜோஷ் ஹஷில்வூட், அடம் சம்பலா, மிட்சல் ஸ்டரக் தலா இரு விக்கெட்டுக்களை கைப்பற்றினனர்.
இலக்கை விரட்டிய அவுஸ்திரேலியா அணி 19.4 ஒவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 121 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றது.
அவுஸ்திரேலியா அணி சார்பில் ஸ்டீவ் ஸ்மித் 34 ஓட்டங்களையும், மார்கஸ் ஸ்டோனிஸ் ஆட்டமிழக்காது 24 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.
பந்து வீச்சில் நொட்ரிஜ் 2 விக்கெட்டுக்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.