அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ‘Truth Social’ என்ற பெயரில் தமது சொந்தச் சமூக வலைத்தளம் ஒன்றை வெளியிடவுள்ளார்.
அதன் முதல் பதிப்பு அடுத்த மாதம் வெளியிடப்படும் என்றும் அதைப் பயன்படுத்துவதற்குக் குறிப்பிட்ட சிலருக்கு அழைப்பு விடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் உரிமையாளரான Trump Media & Technology Group (TMTG), இணையவழிப் பொழுதுபோக்குச் சேவைகளையும் அறிமுகம் செய்யும் எனக் கூறப்படுகிறது.
பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆதிக்கத்தை எதிர்ப்பதற்காக Truth Socialஐ உருவாக்கியதாக ட்ரம்ப் குறிப்பிட்டார்.
இந்த ஆண்டு ஜனவரி 6ஆம் திகதி, அமெரிக்காவின் நாடாளுமன்றத்திற்குள் ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் அத்துமீறி நுழைந்ததை அடுத்து, ருவிட்டர், பேஸ்புக், யூரியுப் ஆகிய சமூக வலைத் தளங்களிலிருந்து அவர் தடை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, சொந்தமாக சமூக வலைத்தளத்தை வெளியிடும் முடிவிற்கு ட்ரம்ப் வந்துள்ளார்.