நாட்டாமை தீர்ப்பிற்கு மறுபேச்சா?: பிரதேசசபை உறுப்பினரால் தாக்கப்பட்டவர் வைத்தியசாலையில்!

Date:

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினரின் தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்த நிலையில் ஒருவர் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேற்படி சம்பவமானது இன்று பிற்பகல் ஆறு மணியளவில் களுவாஞ்சிகுடி மக்கள் வங்கி வீதியில் இடம் பெற்றுள்ளது.

மேற்படி சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது.

களுவாஞ்சிக்குடியில் இண்டு காணி உரிமையாளருக்கிடையில் ஒழுங்கை சம்பந்தமான பிரச்சினை இடம் பெற்ற நிலையில் குறித்த பிரதேச சபை உறுப்பினர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார்.

பிரச்சனையை கேட்டுவிட்டு, தனது தீர்ப்பை அந்த பிரதேசசபை உறுப்பினர் வழங்கியுள்ளார். அதை ஏற்க மறுத்த போது, பிரச்சனையுடன் தொடர்புடைய மறுதரப்பினருன் இணைந்து தன்னை தாக்கியதாக பாதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளார்.

தாக்குதலில் காயமடைந்த அவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

தவெக சட்டமன்றக் குழு தலைவராக விஜய் தேர்வு

தவெக சட்டமன்றக் குழு தலைவராக அக்கட்சியின் தலைவர் விஜய் ஒருமனதாக தேர்வு...

“நம்மைவிட 17.43 லட்சம் வாக்குகளை மட்டுமே தவெக கூடுதலாக பெற்றுள்ளது” – மு.க.ஸ்டாலின்

‘கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியானது, நம்மை விட 17.43 இலட்சம்...

மூளைக்கும் வாய்க்கும் தொடர்பில்லாமல் பேசிய அர்ச்சுனா!

கச்சைதீவை மட்டுமல்ல யாழ்ப்பாணத்தையே தமிழகத்திற்கு கொடுங்கள் என நாடாளுமன்றத்தில் உளறிக்கொட்டியுள்ளார் அர்ச்சுனா...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்