விளக்கேற்றுவற்குள் வித்தை காட்டிய இளைஞன்: சிறுமி வைத்தியசாலையில்!

Date:

வீட்டில் ஏற்பட்ட மின்சாரம் தடையை சரி செய்வதற்காக அழைக்கப்பட்ட உறவுக்கார இளைஞன், வீட்டிலிருந்த 8 வயது சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார்.

சிறுமியின் தாயார் இலாம்பை சரி செய்து, விளக்கேற்றிக் கொண்டு வருவதற்குள் இளைஞன் மன்மத வித்தை காண்பித்துள்ளார்.

இந்த சம்பவம் பண்டாரவளையில் இடம்பெற்றுள்ளது.

பாதிக்கப்பட்ட 8 வயதான சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (13) கைது செய்யப்பட்ட 19 வயதான இளைஞன் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சிறுமியின் வீட்டில் சமையலறையுடன் மற்றுமோர் அறை மட்டுமே உள்ளது. அவ்வீட்டுக்கு தற்காலிக இணைப்பின் ஊடாக மின்சாரம் ​பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அந்த மின்சாரம் கடந்த 12ஆம் திகதி இரவு திடீரென தடைப்பட்டுள்ளது.

மின் தடையை சரி செய்ய, அந்த இளைஞனை வீட்டுக்கு அழைத்துள்ளார் சிறுமியின் தாயார்.

சமையலறைக்கு சென்று இலாம்பை பற்ற வைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்துள்ளார்.

இந்நிலையில், அறையின் கட்டலில் படுத்திருந்த சிறுமியை, இளைஞன் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார் என விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

யாழில் கணவனை கொன்ற மனைவிக்கு மரணதண்டனை

யாழ்ப்பாணம் - அரியாலை, பூம்புகார் பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் ஒன்றுடன்...

வல்வெட்டித்துறையில் எழுச்சியுடன் கொண்டாடப்பட்ட தலைவரின் பிறந்தநாள்

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர்...

4வது மாடியில் சுரேஷ் சாலேயின் காற்சட்டை கழற்றப்பட்டதா?: அந்த ‘அருவருப்பான’ சம்பவம் எது?

முன்னாள் எஸ்.ஐ.எஸ். இயக்குனர் சுரேஷ் சாலே சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார் என்பதை மனநல...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்