புதிய மகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 2 ஈரானிய கைதிகள், சானிட்டைசரை அருந்தியதால் உயிரிழந்தனர். மேலும் 10 ஈரானிய கைதிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தமுயற்சித்த போது, கடற்பரப்பில் கைதான ஈரானிய கைதிகளே இந்த விபரீதத்தில் ஈடுபட்டனர்.
அண்மையில் ஈரானிய தூதரகத்தால் அவர்களிற்கு சானிட்டைசர்கள் வழங்கப்பட்டிருந்தன.




