இலங்கை

UPDATE: அத்துமீறி நுழைந்த 23 இந்திய மீனவர்கள் கைது (PHOTOS)

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த 23 இந்திய மீனவர்கள், கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

வெற்றிலைக்கேணிக்கும் பருத்தித்துறைக்கும் இடையிலான கடற்பரப்பில்  இரண்டு மீன்பிடி படகுகளில் அத்துமீறி நுழைந்த 23 மீணவர்களே கைது செய்யப்பட்டனர்.

வடக்கு கடற்படை கட்டளைபீடத்தின் காங்கேசன்துறை கடற்படை தளத்திற்கு சொந்தமான கப்பல்கள் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

23 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களது இரண்டு படகுகள் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு, மின்பிடி திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

தற்போது அவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்து தம்மை தாக்குவதுடன், தமது வலைகளையும் சேதப்படுத்துவதாக கூறி, வடக்கு கரையோர கிராமங்களில் தொடர் போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், கடற்படையினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

Pagetamil

இலங்கையிலுள்ள பழங்கால ஒலிபெருக்கி சாதனங்களை கடத்தும் இந்தியர்கள்!

Pagetamil

இலங்கையில் ஒருவரின் மாதாந்த அடிப்படை தேவை செலவு ரூ.16,975

Pagetamil

ரூ.1900 கொத்துக்கடை உரிமையாளருக்கு பிணை!

Pagetamil

சிறிமாவோவின் பிறந்தநாள்

Pagetamil

Leave a Comment