பிரபல இசையமைப்பாளர் மணி சர்மாவின் மகன் ஸ்வர சாகர் மஹதிக்கும், பாடகி சஞ்சனாவுக்கும் ஹைதராபாத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது.
தெலுங்கு திரையுலகில் பிரபலமாக இருக்கும் இசையமைப்பாளர் மணி சர்மா. அவரின் மகன் ஸ்வர சாகர் மஹதியும் ஒரு இசையமைப்பாளர். மேலும் பாடகரும் கூட.
இந்நிலையில் ஸ்வர சாகர் மஹதிக்கும், பிரபல பாடகி சஞ்சனாவுக்கும் ஹைதராபாத்தில் அக்டோபர் 12ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் இரு வீட்டாரும், நெருங்கிய நண்பர்களும் தான் கலந்து கொண்டனர்.
நிச்சயதார்த்தத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஸ்வர சாகர் மஹதி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அக்டோபர் 24ம் தேதி சென்னையில் திருமணம் நடக்கவிருக்கிறது.
விமலின் காவல் படத்தில் வந்த நட்டநடு இரவுல பாடல் மூலம் பிரபலமானவர் சஞ்சனா. அதன் பிறகு அவர் தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் பாடி வருகிறார். நிதினின் பீஷ்மா படத்தில் வந்த ஹே சூசா பாடலை பாடினார்.
பீஷ்மா படத்திற்கு ஸ்வர சாகர் மஹதி தான் இசையமைப்பாளர். இந்நிலையில் மஹதி விரைவில் கன்னட திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகவிருக்கிறார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது