சட்டவிரோதமாக நியூசிலாந்து செல்ல முற்பட்ட 63 பேர் சிக்கினர்: யாழ், முல்லைத்தீவை சேர்ந்தவர்கள்!

Date:

சட்டவிரோதமான முறையில் நியூசிலாந்து செல்ல முற்பட்ட 63 பேர் திருகோணமலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துறைமுக வீதியிலுள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்கி இருந்த 63 பேர் கைது செய்துயப்பட்டுள்ளனர். இவர்கள் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும், இவர்களில் பெண்ணொருவர் உட்பட இரண்டு சிறார்கள் அடங்குவதாகவும் தெரியவருகின்றது.

கடந்த 15 நாட்களாக இவர்கள் வெவ்வேறு இடங்களிலிருந்து வந்து குறித்த தனியார் விடுதியில் தங்கி இருந்ததாக அரச புலனாய்வுத் துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்களை திருகோணமலை தலைமை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகள் செய்து வருவதாகவும், விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

-அப்துல்சலாம் யாசீம்-

spot_imgspot_img

More like this
Related

இலங்கையில் சீன சைபர் மோசடிக் கும்பல்களை விசாரிக்க அமெரிக்க FBI குழு வருகை!

இலங்கையில் தங்கியிருந்து சீனப் பிரஜைகளால் நடத்தப்படும் சைபர் மோசடி மையங்கள் தொடர்பான...

கொழும்பில் அபாயகரமான நிலையை எட்டிய காற்று மாசுபாடு! AQI 178 ஆக உயர்வு

கொழும்பில் நேற்று (நவம்பர் 17) காலை காற்று மாசுபாட்டின் அளவு ஆரோக்கியத்திற்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்