இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே இன்று (12) காலை உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.
அவருடன் மேலும் நான்கு மூத்த இராணுவ அதிகாரிகளும் வந்திருந்தனர்.
இந்தியாவில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-122 இல் இன்று (12) காலை 11.05 மணிக்கு இந்திய இராணுவத் தளபதி தலைமையிலான குழுவினர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
தூதுக்குழுவை வரவேற்க இலங்கை இராணுவத்தின் மூத்த அதிகாரிகள் ஏராளமானோர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
1
+1
+1
1