பால் மா, கோதுமை மா, சமையல் எரிவாயு மற்றும் சீமெந்து ஆகியவற்றுக்கான நிர்ணய விலையை நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
நேற்று (07) மாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அமைச்சர்களுக்கு இடையிலான சந்திப்பின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இருந்த போதிலும் நிர்ணய விலை நீக்கப்பட்டுள்ளதன் காரணமாக அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்வோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




