வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவிட்குட்பட்ட பகுதியில் காரில் வந்த கும்பல் இருவேறு வழிப்பறிகளில் ஈடுபட்டு சுமார் 1,500 ரூபாவையும், கையடக்கத் தொலைபேசியையும் திருடிச் சென்றுள்ளனர்.
தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திற்கு அருகிலும், இமையாணன் தண்ணீர் தாங்கியடியிலும் சிறிய நேர இடைவெளியில் இந்த வழிப்பறிகள் இடம்பெற்றுள்ளன.
தொண்டமானாறு, செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திற்கு அண்மையன வீதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த முதியவரை, காரில் வந்த குழு வழிமறித்தது.
சுகாதாரத்துறையினரை போல நடித்த குழுவினர், முதியவரிடம் தடுப்பூசி அட்டை இருக்கிறதா என வினவினர். முதியவரிடம் தடுப்பூசி அட்டை இருக்கவில்லை. அவரிடம் அடையாள அட்டை கேட்டதும், அவர் தடுமாறியபடி பணப்பையை எடுத்த போது, பணப்பையையும், அவரிடமிருந்த கையடக்க தொலைபேசியையும் பறித்துக் கொண்டு கும்பல் தப்பியோடியது.
அவரது பணப்பையில் 400 ரூபா பணம் இருந்துள்ளது.
பின்னர், இமையாணன் தண்ணீர்தாங்கியடியில் சென்ற முதியவரை வழிமறித்து, தடுப்பூசி அட்டை கேட்டனர். அவரிடமிருந்தும் பணப்பையை பறித்துக் கொண்டு கும்பல் தப்பிச் சென்றது.
அவரது பணப்பையில் சுமார் 1200 ரூபா பணம் இருந்துள்ளது.
வெள்ளை நிற காரில் வந்த குழுவினரே இந்த திருட்டில் ஈடுபட்டனர். சிசிரிவி கமரா இல்லாத இடங்களிலேயே திருட்டு இடம்பெற்றுள்ளது. இதையடுத்து, அந்த பிரதேசங்களில் உள்ள சிசிரிவி கமராக்களை பொலிசார் பரிசோதித்து வருகிறார்கள்.