அனுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள், விரைவில் யாழ். சிறைக்கு மாற்றப்படலாமென தகவல் வெளியாகியுள்ளது.
இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவுக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுக்களை முன் வைத்துள்ள, அனுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 8 அரசியல் கைதிகளின் பாதுகாப்பினையும் உறுதி செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நீதி அமைச்சர் அலி சப்ரி இது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பினருடன் தகவல்களை பரிமாறியுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1