24.4 C
Jaffna
January 28, 2025
Pagetamil
இலங்கை

யாழ் மாவட்ட மணல் தேவைக்கு மருதங்கேணி மணற் திட்டுக்களை அகற்ற தீர்மானம்!

யாழ்ப்பாண மாவட்டத்தில் கட்டுமான தேவைகளுக்கு மணலை பெறுவதில் உள்ள சிக்கல் நிலை தொடர்பில் இன்றைய தினம் யாழ் மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது

யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதேச செயலர்கள் கலந்து கொண்டனர்.

குறித்த கூட்டத்தின் பின்னர் கருத்துரைத்த யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்..

யாழ்ப்பாண மாவட்டத்திலே கட்டுமானத் தேவைக்காக மணல் பெறுதில் பல்வேறுபட்ட இடைஞ்சல்கள் சிக்கல்கள் காணப்படுகின்றன.

அத்தோடு மணல் விலையும் அதிகரித்து காணப்படுகின்றது. அத்தோடு சட்டவிரோத மணல் அகழ்வு இடம் பெற்றுக் காணப்படுகின்றது. இதனை நாங்கள் பலதரப்பட்ட கூட்டங்களை கடந்தகால நடத்தி சம்பந்தப்பட்ட தரப்பினருடன் நடத்திய வகையில் சில தீர்மானங்களை இன்றைய தினம் எடுத்து இருக்கின்றோம். அதனடிப்படையில் மருதங்கேணி பிரதேசத்தில் காணப்படுகின்ற மணல் திட்டுக்களை ஒரு குறிப்பிட்டவற்றை சூழலை பாதிக்காதவாறு அவற்றைப் பெற்று அபிவிருத்தி திட்டங்களுக்கும் தனியார் கட்டுமான திட்டங்களுக்கும் பயன்படுத்துவதற்குரிய ஏற்பாடுகளை முன்னெடுத்து இருகின்றோம்.

இதிலே காணப்பட்ட பல விடயங்கள் பல பிரச்சினைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் ஆராய்ந்து அதன் அடிப்படையில் இவற்றை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்குரிய நடவடிக்கை எடுத்துள்ளோம்.

மாவட்ட செயலகம் மருதங்கேணி பிரதேச செயலகம் மற்றும் அதனுடைய தொடர்புடைய திணைக்களங்கள் மற்றும் அந்த கிராமங்களில் உள்ள கிராம அபிவிருத்தி சங்கத்துடன் இணைந்து பாரவூர்தி சங்கத்தினருடனும் இணைந்த வகையில் இந்த மணலை பெற்று பயன்படுத்தக் கூடிய ஒரு பொறிமுறையும் அதற்குரிய திட்டங்களை ஏற்பாடு செய்து இருக்கின்றோம்.

அதன் அடிப்படையில் மணல் கோரிக்கை விடுத்துள்ளவர்களுடைய கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு அவர்களுக்குரிய மணல் வழங்கக்கூடிய நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.இந்த செயற்பாட்டில் அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து ஒத்துழைத்து செயற்பட வேண்டும் என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஊடகவியலாளர் மீது குற்றச்சாட்டு

east tamil

குடத்தனையில் பொலிஸ், இராணுவம், அதிரடிப்படை இணைந்து அதிரடி சோதனை

east tamil

முல்லைத்தீவில் தூக்கிலிடப்பட்ட நாய்: செல்லமாக வளர்த்த பெண் சொல்லும் கதை; கொடூர பெண்ணுக்கு விளக்கமறியல்!

Pagetamil

யாழ் பல்கலையில் இரவில் பெண்களின் உள்ளாடைகள் காணப்படும் சம்பவம் உண்மையா?: மற்றொரு விளக்கம்!

Pagetamil

மாணவர்கள் மீது இரும்புக்கர நடவடிக்கை தேவை: விடாப்பிடியாக நிற்கும் யாழ் பல்கலை ஆசிரியர்கள்!

Pagetamil

Leave a Comment