கனடாவில் நடந்த ஓரினச்சேர்க்கை பெண்களின் திருமணத்தை நடத்தி வைத்த குருக்களை தொலைபேசியில் மிரட்டிய குற்றச்சாட்டில் சட்டவாளர் உமாநந்தினி நிஷநாதன் (47 என்பவரை டொராண்டோ பொலிசார் கைது செய்துள்ளனர்.
கென்னடி சாலை, எக்லிண்டன் அவென்யூ கிழக்கு பகுதியில் நடந்த வெறுப்பு குற்றம் தொடர்பாக அவரை கைது செய்துள்ளதாக டொராண்டோ பொலிசார் தெரிவித்துள்ளனர்.
ஓரினச்சேர்க்கை பெண்கள் இருவர் அண்மையில் கனடாவில் திருமணம் செய்து கொண்டிருந்தனர். அந்த திருமணத்தை நடத்திய ரங்கராஜ குருக்களை செப்டம்பர் 28 அன்று தொலைபேசயில் தொடர்பு கொண்ட தாக உமாநந்தினி, மிரட்டியதாக டொராண்டோ பொலிசார் தெரிவித்தனர்.
ரங்கராஜ குருக்கள் “பல மிரட்டல் தொலைபேசி அழைப்புகளைப் பெற்றதாகவும்” கூறப்படுகிறது.
புலனாய்வாளர்கள், காவல்துறையின் வெறுப்பு குற்றப் பிரிவை கலந்தாலோசித்ததாகவும், இந்த சம்பவம் ஒரு வெறுப்பு குற்றமாக விசாரிக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டது.
வெள்ளிக்கிழமை, டொராண்டோவைச் சேர்ந்த உமாநந்தினி நிஷநாதன் (47) என்பவரை கைது செய்ததாக பொலிசார் தெரிவித்தனர்.
அவர் மீது மிரட்டல் மற்றும் கிரிமினல் துன்புறுத்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
நவம்பர் 16 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று பொலிசார் தெரிவித்தனர்.
Arrest made in suspected hate-motivated utter threats investigation, Umananthini Nishanathan, 47 https://t.co/rXiDegOfPM
— Toronto Police (@TorontoPolice) October 3, 2021