25.7 C
Jaffna
January 10, 2025
Pagetamil
முக்கியச் செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களில் சிலர் பிக்குகளாக மாற்றப்பட்டுள்ளனர்!

காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களில் பெரும்பாலானோர் உயிருடன் இருப்பதாக நாங்கள் அறிகிறோம். அவர்களில் சிலர் கடத்தப்பட்டு, பல நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர். அவர்களில் சிலர் இராணுவ முகாம்களில் பணியாற்றுகின்றனர். அவர்களில் சிலர் பிக்குகளாகவும், சிலர் சிங்களவர்களாகவும் மாற்றபட்டடுள்ளனர் என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க செயலாளர் கோ.ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் 1688 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஒற்றுமை என்பது வெறும் பேச்சு மட்டுமல்ல. ஒருங்கிணைந்த கொள்கையுடன் இணைவது. பாதிக்கப்பட்டவர்களுக்கு அங்கஜனின் முதல் மருந்தை நாம் எதிர்க்கிறோம். இன்று 1688வது நாளாக காணாமல் ஆக்கப்பட்ட குழந்தைகளை கண்டுபிடிப்பதற்கான எமது போராட்டம் தொடர்கிறது. இந்த சர்வதேச குழந்தைகள் தினத்தன்று, இரண்டு முக்கியமான செய்திகளை நாம் தமிழர்களுக்குக் எடுத்து இயம்ப விரும்புகிறோம்.

காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளின் தாய்மார்களான நாங்கள் தமிழர்களிடமிருந்து, குறிப்பாக தமிழ் அரசியல்வாதிகளிடமிருந்து ஒரு ஒருங்கிணைந்த தீர்மானத்தை விரும்புகிறோம். யூதர்கள் பெரும்பாலானோர் தம்மிடையே பல வேறுபாடுகள் இருந்தாலும் கூட, தம் குறிக்கோளில் ஒன்றிணைந்தனர். இதன் விளைவாக தான் இன்று இஸ்ரேல் என்று ஒரு நாடு உள்ளது.

அதேபோல் பின்வரும் தீர்மானத்துடன் நாம் இலக்கை அடைய வேண்டும். தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஐ.நா கண்காணிப்புடன் பொது வாக்கெடுப்பு, பாதிக்கப்பட்ட தமிழ் இனத்தவர்களுக்கு நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான சர்வதேச விசாரணை, தமிழர்க்கான அரசியல் தீர்வு- ஒரு பாதுகாப்பான மற்றும் பாதுகாக்கப்பட்ட- மீள பெறப்பட முடியாத தமிழர் தாயகத்தை அடிப்படையாகக் கொண்டது, காணாமல் ஆக்கப்பட்ட குழந்தைகளை கண்டுபிடிக்க அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தடயவியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல், அரசியல் தீர்வு பற்றி இலங்கை அரசாங்கத்துடன் பேசமாட்டோம் என்று வாக்குறுதி அளிக்கவும் ஏனென்றால் நாம் இன்னும் 74 வருடங்கள் ஏமாறக்கூடாது, தமிழர்கள் மற்றும் சிங்களவர்களுக்கு இடையே மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா- ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவை மத்தியஸ்தர்களாக நாம் பயன்படுத்த வேண்டும் மேற்கண்ட கொள்கைகளை யாரும் மீறக்கூடாது.

போரில் பாதிக்கப்பட்ட நாங்கள் இத் தீர்மானத்தை தயாரிக்க விரும்புகிறோம். இதில் தமிழ் அரசியல்வாதி மற்றும் சிவில் குடிமக்கள், குழுக்களிடமிருந்து கையொப்பங்களை சேகரிக்க விரும்புகிறோம்.

காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களில் பெரும்பாலானோர் உயிருடன் இருப்பதாக நாங்கள் அறிகிறோம். அவர்களில் சிலர் கடத்தப்பட்டு, பல நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர். அவர்களில் சிலர் இராணுவ முகாம்களில் பணியாற்றுகின்றனர். அவர்களில் சிலர் பிக்குகளாகவும், சிலர் சிங்களவர்களாகவும் மாற்ற பட்டடுள்ளனர்.

முன்னாள் அமெரிக்க தூதர் ராபர்ட் பிளேக்கின் கூற்றுப்படி, துணை ராணுவக் குழு இளம் சிறுவர் மற்றும் சிறுமிகளை மலேசியா, மாலைத்தீவு மற்றும் இந்தியாவுக்கு அடிமை வேலை மற்றும் பாலியல் அடிமைகளாக அனுப்பியது.

ஆனால், காணாமல் ஆக்கப்பட்ட தாய்மார்களின் போராட்டங்களைக் கட்டுப்படுத்த இறப்பு சான்றிதழை தனது முதல் மருந்தாக கொடுக்க விரும்புவதாக அங்கஜன் கூறுகிறார். அங்கஜன் இதை நிரூபிக்க விரும்பினால், அவர் காணாமல் ஆக்கப்பட்ட ஒருவர் உயிருடன் இருக்கும்போது எடுத்த படத்தையும், இறக்கும் போது எடுத்த படத்தையும், இறந்த பின் எடுத்த படத்தையும் வெளிப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பதவி விலகுவதாக அறிவித்தார் கனடா பிரதமர்: அமெரிக்காவின் புதிய மாநிலமாக இணைய ட்ரம்ப் அழைப்பு!

Pagetamil

முல்லைத்தீவில் கரையொதுங்கியவர்கள் உண்மையான அகதிகளா என ஆராய்கிறதாம் அனுர அரசு!

Pagetamil

முக்கிய தீர்மானங்கள் இல்லை… வழக்கம் போல கூடிக்கலைந்தது ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி!

Pagetamil

அனுர ஜன.13- 17 வரை சீன விஜயம்!

Pagetamil

கற்பனைக் குதிரைக்கு வயது 75

Pagetamil

Leave a Comment