இந்தியா- இலங்கை படையினர் கூட்டு போர்ப்பயிற்சி!

Date:

பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதை மையமாகக் கொண்டு இந்தியாவும் இலங்கையும் திங்கள்கிழமை முதல் 12 நாள் மிகப்பெரிய இராணுவப் பயிற்சியை நடத்தவுள்ளன.

8வது ‘மித்ர சக்தி’ பயிற்சி  திங்கள் முதல் ஒக்டோபர் 15 வரை அம்பாறையில் உள்ள போர் பயிற்சி பாடசாலையில் நடத்தப்படும்.

“இரு நாடுகளின் ராணுவங்களுக்கிடையேயான நெருக்கமான உறவை மேம்படுத்துவதோடு, செயல்பாட்டை மேம்படுத்துவதும், கிளர்ச்சி மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வதும் இந்தப் பயிற்சியின் நோக்கமாகும்.” என இந்தியப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த பயிற்சியில் இந்திய இராணுவத்தைச் சேர்ந்த 120 பேர் கொண்ட அணியும், இலங்கை இராணுவத்தின் ஒரு படைப்பிரிவும் பங்கேற்பார்கள் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த பயிற்சி தெற்காசிய நாடுகளுக்கிடையிலான உறவை மேலும் வலுப்படுத்த நீண்ட தூரம் செல்லும் என்றும், இரு படைகளுக்கும் இடையே அடிமட்ட அளவில் ஒத்துழைப்பை கொண்டுவருவதில் ஒரு ஊக்கியாக செயல்படும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.

7வது மித்ரா சக்தி பயிற்சி  2019 இல் புனேயில் உள்ள வெளிநாட்டு பயிற்சி முனையில் (FTN) நடத்தப்பட்டது.

spot_imgspot_img

More like this
Related

ஹரக் கட்டா மீது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு தொடர முடியாது!

முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவர் நதுன்...

காசா போர் நிறுத்தத் திட்டத்திற்கான 15 அம்ச செயல்திட்டத்தை அமைதி வாரியம் வெளியிட்டது

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் காசா போர்நிறுத்தத் திட்டத்தின் இறுதிக் கட்டங்களைச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்