29.8 C
Jaffna
March 29, 2024
இலங்கை

கோவிட் தொற்றுடன் வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பம் உறவினர்களுடன் சுற்றுலா: சுகாதாரப் பிரிவினர் வழக்கு தாக்கல்

வவுனியாவில் கோவிட் தொற்றுடன் தனிமைப்படுத்தப்பட்டிருந்த குடும்பம் ஒன்று உறவினர்களுடன், சுற்றுலா சென்றுள்ளதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து, குறித்த குடும்பத்திற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியில் வசிக்கும் 5 பேர் கொண்ட குடும்பம் ஒன்றில் ஒருவருக்கு கடந்த 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட துரித அன்டிஜன் பரிசோதனையில் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து குறித்த குடும்பம் வசித்து வந்த பண்டாரிக்குளம் பகுதியில் அமைந்திருந்த வீடு கடந்த 22 ஆம் திகதி முதல் 14 நாட்களுக்கு சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டிருந்தது. இருப்பினும், சுகாதாரப் பிரிவினருக்கு அறிவிக்காது குறித்த குடும்பத்தினர் கோவிட் தொற்றாளருடன் இணைந்து வெளிநாட்டில் இருந்து வருகை தந்த தமது உறவினர்களுடன் சுற்றுலா சென்றுள்ளதாக சுகாதாரப் பிரிவினருக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து, சுகாதாரப் பிரிவினர் அவர்களது வீட்டிற்கு சென்றிருந்தனர். அங்கு கோவிட் தொற்றாளர் மற்றும் அவருடன் இணைந்து தனிமைப்படுத்தப்பட்ட எவரும் இருக்கவில்லை.

இதனால், குறித்த குடும்பத்தினருக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறை மீறலின் கீழ் பொலிசார் ஊடாக வவுனியா நீதிமன்றில் வழங்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், குறித்த குடும்பத்தினர் தற்போது உள்ள பகுதியில் அவர்களை தனிமைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரப் பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஞானசாரர் வைத்தியசாலையில்

Pagetamil

வட்டுக்கோட்டை இளைஞன் கொலை: கைதான ரௌடிகளின் தொலைபேசி உரையாடல் அறிக்கையை பெற அனுமதி!

Pagetamil

யாழ் போதனா மருத்துவ கழிவு பிரச்சினைக்கு தீர்வு: கோம்பயன் மயானத்தில் எரியூட்டி திறப்பு!

Pagetamil

கிளிநொச்சி ஆயுர் வேத வைத்தியசாலைகளில் மருந்துக்களுக்கு தட்டுப்பாடு

Pagetamil

பெரமுனவுக்கும் அதிகரிக்கும் பிளவு!

Pagetamil

Leave a Comment