பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டால் ஏற்படும் பக்கவிளைவு என்ன?- ஆய்வில் தகவல்

Date:

கொரோனா தொற்றை முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்குப் பல்வேறு நாடுகள் பூஸ்டர் தடுப்பூசியைப் பரிந்துரை செய்துள்ளன. இந்த நிலையில் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்வதால் ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து அமெரிக்க நோய்த் தடுப்பு மையம் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க நோய்த் தடுப்பு மையத்தின் இயக்குநர் ரோசெல்லா வெலன்ஸ்கி கூறும்போது, “கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு எம்மாதிரியான பக்க விளைவுகள் ஏற்படுமோ அதே மாதிரியான மிதமான பக்கவிளைவுகளே பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கும் ஏற்படுகிறது.

பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் 71% பேருக்கு ஊசி போட்ட இடத்தில் வலி உள்ளது. 56% பேருக்குச் சோர்வும், 43% பேருக்குத் தலைவலியும் ஏற்படுகின்றன.
28% பேருக்குத் தங்களது அன்றாடச் செயல்பாடுகளில் மந்த நிலை ஏற்படுகிறது.

பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் 0.1% பேர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகள் பூஸ்டர் தடுப்பூசிகளைச் செலுத்த ஆயத்தமாகி உள்ளன.

spot_imgspot_img

More like this
Related

உக்ரைன் ஆயுதங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்திய Starlink? அமெரிக்கா மீது சந்தேகம்!

உக்ரைனின் இராணுவ நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் Starlink இணையச் சேவையில் விதிக்கப்பட்ட வேகக்...

அமெரிக்காவில் சிறிய விமானம் விபத்து – குழந்தை உட்பட 6 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் இடம்பெற்ற சிறிய விமான விபத்தில் குழந்தை உட்பட...

இலங்கையில் இன்னும் அறிமுகமாகாத டெங்கு தடுப்பூசி! அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்?

இலங்கையில் டெங்கு தடுப்பூசியை அறிமுகப்படுத்துவதாக சுகாதார அமைச்சு அறிவித்திருந்த போதிலும், இதுவரை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்