26.3 C
Jaffna
January 2, 2025
Pagetamil
உலகம் முக்கியச் செய்திகள்

கொரோனாவின் விளைவு: மனிதர்களின் ஆயுட்காலம் குறைந்தது; ஆண்களிலேயே அதிக வீழ்ச்சி!

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, கடந்த ஆண்டு, COVID-19 தொற்று காரணமாக மக்களின் ஆயுட்கால எதிர்பார்ப்பு பெருமளவு குறைந்ததாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில் இது தெரிய வந்தது.

2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், ஆயுட்கால எதிர்பார்ப்பு கடந்த ஆண்டு, சுமார் 6 மாதம் குறைந்ததாக ஆய்வில் தெரியவந்தது.

ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் சிலி ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஆய்வில் பகுப்பாய்வு செய்யப்பட்ட 29 நாடுகளில் 22 இல் 2019 ஆம் ஆண்டன் உடன் ஒப்பிடும்போது ஆயுட்காலம் ஆறு மாதங்களுக்கு மேல் குறைந்துள்ளது. ஒட்டுமொத்த 29 நாடுகளில் 27 நாடுகளில் ஆயுட்காலம் குறைந்துள்ளது.

பல்வேறு நாடுகளில் ஆயுட்கால எதிர்பார்ப்பு குறைந்ததற்கு, COVID-19 நோய்ப்பரவலால் ஏற்பட்ட மரணங்கள் காரணமாக இருக்கலாம் என ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் கூறுகிறது.

பெரும்பாலான நாடுகளில் பெண்களை விட ஆண்களின் ஆயுட்காலம் அதிக வீழ்ச்சியாக இருந்தது. அமெரிக்காவில் ஆண்களின் ஆயுட்காலத்தில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது. அங்கு 2019 உடன் ஒப்பிடும்போது 2.2 ஆண்டுகள் ஆயுட்காலம் குறைந்துள்ளது.

ஒட்டுமொத்தமாக, 15 நாடுகளில் ஆண்களின் ஆயுட்காலம் ஒரு வருடத்திற்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
2

இதையும் படியுங்கள்

16 முறை விண்வெளியில் புத்தாண்டை கொண்டாடும் சுனிதா வில்லியம்ஸ்

east tamil

கற்பனைக் குதிரைக்கு வயது 75

Pagetamil

திருகோணமலை கடற்கரையில் பெண்ணின் சடலம்

east tamil

சைபர் தாக்குதலுக்கு இலக்கானது இலங்கை பொலிஸ் யூடியூப் சேனல்

east tamil

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி காட்டர் காலமானார்!

Pagetamil

Leave a Comment