கடத்தல்காரர்களை கொன்று 4 உடல்களை நகரத்தில் கட்டித் தொங்கவிட்ட தலிபான்கள்!

Date:

ஆப்கானிஸ்தானில் 4  உடல்களை தலிபான்கள் நகரின் மையப்பகுதியில் கட்டி தொங்கவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ள தலிபான்கள் கடுமையான சட்டங்களை பின்பற்றி ஆட்சி செய்து வருகிறது. பெண்களுக்கான அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு வருகிறது. மேலும், தங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களுக்கு தலிபான்கள் கொடூரமான தண்டனைகளை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், மேற்கு ஹெராட் மாகாணத்தின் மையப்பகுதியில் உயிரிழந்தவர்களில் 4 உடல்களை தலிபான்கள் இன்று கிரேன் மூலம் கட்டி தொங்கவிட்டனர்.

கொல்லப்பட்டவர்கள் சமீபத்தில் ஹெராட் நகரத்தின் போலீஸ் மாவட்டம் 12 ல் இருந்து அவரது மகனுடன் ஒரு தொழிலதிபரை கடத்திச் சென்றனர்.

கடந்த வாரம் மேற்கு ஹெராட் மாகாணத்தில் கடத்தல்காரர்களால் கடத்தப்பட்ட மற்றொரு சிறுவனை தலிபான்கள் மீட்டனர்

எதிர்காலத்தில் யாரும் குற்றமிழைக்கக்கூடாதென்பதற்காக உடல்களை கட்டித் தொங்கவிட்டதாக தலிபான்கள் தெரிவித்தனர்.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்து, குற்றங்களின் எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது, ஆனால் வேலைவாய்ப்பை வழங்காவிட்டால் குற்றங்கள் மீண்டும் உயரும் என்று மக்கள் அஞ்சுகின்றனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

தமிழக தேர்தலில் யாரும் எதிர்பாராத திருப்பம்.. தி.மு.க.வுக்கு பெரும் பின்னடைவு… த.வெ.க முன்னிலையில்!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர், துணை முதல்வர் உட்பட திமுக அமைச்சர்கள்...

முல்லைத்தீவில் இரு மீனவர்கள் மாயம்

முல்லைத்தீவு கள்ளப்பாடு பகுதியில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற இரண்டு மீனவர்கள் காணாமல்...

யாழில் பியர் போத்தலால் தாக்கப்பட்டவர் பலி

யாழ்ப்பாணத்தில் பியர் போத்தலால் தாக்கப்பட்டதில் 36 வயதுடைய நபர் ஒருவர் கொல்லப்பட்டதாக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்