ஹீரோவை பகைத்துக் கொண்டாரா பூஜா ஹெக்டே?

Date:

ராதே ஷ்யாம் படத்தில் நடித்தபோது பிரபாஸுக்கும், ஹீரோயின் பூஜா ஹெக்டேவுக்கும் இடையே பிரச்சனை என்று வெளியான தகவல் குறித்து தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்திருக்கிறது.

ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸும், பூஜா ஹெக்டேவும் சேர்ந்து நடித்திருக்கும் ராதே ஷ்யாம் படம் அடுத்த ஆண்டு சங்கராந்தி பண்டிகை ஸ்பெஷலாக வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் பிரபாஸுக்கும், பூஜா ஹெக்டேவுக்கும் இடையே பிரச்சனை என்று தகவல் வெளியானது.

படப்பிடிப்புக்கு தாமதமாக வந்தது மட்டும் அல்லாமல் ப்ரொஃபஷனலாகவும் நடக்கவில்லை பூஜா என்று பிரபாஸ் கோபப்பட்டாராம். இதையடுத்து பிரபாஸும், பூஜா ஹெக்டேவும் பேசிக் கொள்வதில்லை என்று கூறப்பட்டது.

இந்நிலையில் இது குறித்து தயாரிப்பு நிறுவனமான யுவி கிரியேஷன்ஸ் விளக்கம் அளித்திருக்கிறது.

“பிரபாஸுக்கும், பூஜா ஹெக்டேவுக்கும் இடையே பிரச்சனை என்பதில் உண்மை இல்லை. அவர்கள் ஒருவர் மீது மற்றொருவர் அதிக மரியாதை வைத்திருக்கிறார்கள்.

பூஜா எப்பொழுதுமே சரியான நேரத்திற்கு ஷூட்டிங்கிற்கு வந்துவிடுவார். சொல்லப் போனால் அவருடன் சேர்ந்து பணியாற்றுவது மிகவும் எளிது. யாரோ ஒருவருடைய கற்பனை தான் இந்த வதந்திகள் எல்லாம். ஹீரோ, ஹீரோயின் இடையே எந்த பிரச்சனையும் இல்லை“ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

புகையிரதம் மோதி ஒருவர் பலி

யாழ்ப்பாணம் - அரியாலை புங்கன்குளம் பகுதியில் உள்ள புகையிரதத்துடன் மோதுண்டு ஒருவர்...

கொக்கட்டிச்சோலை கண்டியனாறு பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை 10 பெரல் கோடா மீட்பு

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள கண்டியனாறு குளம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்