சினிமா

யோகி பாபுவின் ஜோடியானார் ஓவியா!

அன்கா மீடியா நிறுவனம் தயாரிக்கவுள்ள புதிய படத்தில் யோகி பாபு ஜோடியாக ஓவியா நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்துடன் இணையத்தில் படு ஆக்டிவாக செயல்பட்டு வருபவர் நடிகை ஓவியா. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் திரைத்துறையில் ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட இவர் சரியான வாய்ப்புகள் அமையாமல் இருந்தது. இந்நிலையில் ஓவியாவின் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

ஒரு பக்கம் காமெடியனாகவும் மறு பக்கம் ஹீரோவாகவும் கைவசம் பல படங்களுடன் பிசியான நடிகராக திகழ்பவர் யோகி பாபு. கடைசியாக யோகி பாபு நடிப்பில் வெளியான மண்டேலா படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதோடு, அவரின் நடிப்பும் பலரால் பாராட்டப்பட்டது. மேலும், யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள பல படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன.

இந்நிலையில், நடிகர் யோகிபாபு அடுத்ததாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தை அன்கா மீடியா நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்தப்படத்தில் தான் யோகிபாபுவுக்கு ஜோடியாக நடிகை ஓவியா நடிக்க உள்ளார். இப்படத்தின் பூஜை வருகிற செப்டம்பர் 24ஆம் திகதி நடைபெற உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. நடிகை ஓவியா, யோகிபாபுவுக்கு ஜோடியாக நடிப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் சக்தி சிதம்பரம் இயக்கத்தில் வடிவேலு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட ‘பேய் மாமா’ படத்தில் அவருக்கு பதிலாக யோகி பாபு ஹீரோவாக நடித்துள்ளார். இந்தப்படம் இந்த வாரம் வெளியாக உள்ளது. இந்நிலையில் படக்குழுவினர் வெளியிட்டுள்ள இந்தப்படத்தின் போஸ்டர் பாலிவுட்டில் விக்கி கவுஷல் நடித்த ‘பூட் போலீஸ்’ பட போஸ்டரின் காப்பி என சர்ச்சைகள் கிளம்பியுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வருண் தேஜ்- லாவண்யா நிச்சயதார்த்தம் 9ஆம் திகதி

Pagetamil

சரத் பாபுவின் மரணம் பற்றி முதல் மனைவி வெளியிட்ட கருத்து!

Pagetamil

நடிகை ரகுல் ப்ரீத் சிங் கருக்கலைப்பு செய்தாரா?

Pagetamil

‘படத்தில் நான் ஒரு கம்யூனிஸ்ட்; வேற மாதிரி இருக்கும்’: மாமன்னன் குறித்து நடிகை கீர்த்தி சுரேஷ்

Pagetamil

விஷால் ஜோடியாக கீர்த்தி ஷெட்டி?

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!