முல்லைத்தீவு, மாந்தை கிழக்கு பிரதேசத்திற்குட்பட்ட மல்லாவி, கொல்லவிளாங்குளம் பகுதியில் இரண்டு பிள்ளைகளின் தாயார் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இன்று (20) காலை அவர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டு பொலீசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து மல்லாவி பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
பிரதீபன் புஸ்பராணி (32) எனும் இளம் குடும்ப பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சில வருடங்களின் முன்னர் கணவன் காலமாகிய நிலையில், இரண்டு பிள்ளைகளுடன் ஆடைத்தொழில்சாலையில் பணியாற்றி வந்துள்ளார்.
இவரது சடலம் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனை மற்றும் பி.சி.ஆர் முடிவுகளின் பின்னர் உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக மல்லாவி பொலீசார் தெரிவித்துள்ளார்கள்.




