‘சந்திரமுகி 2’ அப்டேட்: நாயகியாக அனுஷ்காவிடம் பேச்சுவார்த்தை

Date:

‘சந்திரமுகி 2’ படத்தில் நாயகியாக நடிக்க அனுஷ்காவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

பி.வாசு இயக்கத்தில் ரஜினி, ஜோதிகா, பிரபு, நயன்தாரா, வடிவேலு, நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘சந்திரமுகி’. இந்தப் படத்தின் 2-ம் பாகத்தின் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

பி.வாசு இயக்கவுள்ள இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ரஜினியின் அனுமதியோடு இந்தப் படத்தில் நாயகனாக நடிக்கவுள்ளார் லாரன்ஸ். ‘சந்திரமுகி’ படத்தில் ஜோதிகாவின் கதாபாத்திரம் பெருவாரியாகப் பேசப்பட்டது. அதேபோல் ‘சந்திரமுகி 2’ படத்திலும் ஒரு முக்கியமான நாயகி கதாபாத்திரம் உள்ளது.

அதில் நடிப்பதற்காக முதலில் அனுஷ்காவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. முதலில் அவர் மறுப்பு தெரிவித்துவிட்டார். தற்போது உடலை மீண்டும் குறைத்து நடிப்பதற்குக் கதைகள் கேட்டு வருகிறார். இதனால் மீண்டும் ‘சந்திரமுகி 2’ படக்குழுவினர் அனுஷ்காவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

இந்தப் படத்தில் வடிவேலு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இதனை சமீபத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் வடிவேலுவே உறுதிப்படுத்தியுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

பெருமளவு போதைப்பொருளுடன் அழகுநிலைய ஜோடி கைது!

மாத்தறையில் அழகு நிலையம் நடத்தி வரும் தம்பதியினர், சுமார் 7 கோடி...

நேபாள பெருவெள்ளம்: இதுவரை 359 பேர் உயிரிழப்பு; 800+ பேரை தேடும் பணி தீவிரம்

நேபாள வெள்ளப் பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 359 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு...

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய இரதோற்சவம் கோலாகலம்!

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய இரதோற்சவம் கோலாகலம்! வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்