மட்டக்களப்பு பேத்தாழை ஆற்றில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற நபர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
நேற்று ஞாயிற்றுக் கிழமை (19) மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.கும்புறுமூலை வெம்பு வாழைச்சேனைசேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான சின்னான் சித்திரவேலாயுதம் (62) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலத்தினை தேடும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டனர். பின்னர் ‘கல்குடா டைவஸ்;’ அமைப்பின் சுழியோடிகள் வரவழைக்கப்பட்டு சடலம் மீட்கப்பட்டது.சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு உடற் கூற்றாய்விற்காக மட்டக்களப்பு போதானா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக அவருடன் குளிக்கச் சென்ற இரண்டு நபர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டதுடன் மேலதிக விசாரணைகளை கல்குடா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.





