வான் தாக்குதலில் 10 பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு அமெரிக்கா மன்னிப்பு கோரியது!

Date:

காபூலில் தவறுதலாக நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலுக்கு அமெரிக்கா மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

காபூலில் கடந்த மாதம் தற்கொலைப்படை தீவிரவாதியைக் குறிவைத்து அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமானம் (ட்ரோன்) தாக்குதலில் பொதுமக்கள்10 பேர் பலியானார்கள். இந்த நிலையில் இந்த ட்ரோன் தாக்குதலுக்கு அமெரிக்கா மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க ராணுவம் தரப்பில், “ எங்கள் விசாரணை முடிவில், காபூல் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட ட்ரோன்தாக்குதல் மிகத் தவறான ஒன்று என்று தெரிய வந்துள்ளது. இதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக காபூல் விமான நிலையத்தில் உயிரிழப்பு ஏற்படுவதற்கு அமெரிக்காவின் தாக்குதலே காரணம். இந்தத் தாக்குதலை நடத்துவதற்கு முன்னர் எந்த முன் அறிவிப்பையும் அமெரிக்கா எங்களிடம் முன்பே தெரிவிக்கவில்லை. இதனை அமெரிக்கா தெரிவித்திருக்க வேண்டும் என தலிபான்கள் குற்றம் சுமத்தினர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

நிதியமைச்சர் ஆனார் செங்கோட்டையன்: முதல்வர் விஜய், 9 அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு

தமிழக அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் செங்கோட்டையனுக்கு...

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட மேலதி வரி குறித்து விளக்கம்!

வாகன இறக்குமதி மீது விதிக்கப்பட்டுள்ள 50% மேலதிக வரி (Surcharge) குறித்து...

“என் பிள்ளைகளை பார்க்க விடுவதில்லை…” – கலங்கிய ரவி மோகன் கூறியது என்ன?

“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்