26.5 C
Jaffna
January 23, 2025
Pagetamil
இலங்கை

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி!

நீர்வேலி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நீர்வேலி பகுதியை சேர்ந்த டிலக்சன் (24) எனும் இளைஞனே உயிரிழந்தவராவார்

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் நீர்வேலி சந்திக்கு அருகில் உள்ள ஞான வைரவர் ஆலயம் முன்பாக நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்திலையே இளைஞன் உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் வேகா ரக மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கி சென்று கொண்டிருந்த வேளை மோட்டார் சைக்கிளில் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியோரமாக இருந்த சீமெந்து கட்டுடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளார்.

அதன் போது , கட்டில் காணப்பட்ட இரும்புக்கம்பி அவரது நெஞ்சு பகுதியில் குத்தியுள்ளது. அதனால் படுகாயமடைந்த இளைஞனை நோயாளர் காவு வண்டி மூலம் வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு , வைத்திய சாலையில் அனுமதித்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

புறக்கோட்டையில் சட்டவிரோத மருந்து மற்றும் அழகுசாதனப் பொருட்கள் பறிமுதல்

east tamil

அனர்த்த உயிரிழப்புகளுக்கான இழப்பீட்டுத் தொகை உயர்வு: அரசு அனுமதி

east tamil

தெமோதர ஜங்சனில் லொரி விபத்து

east tamil

கனடாவில் துயரச்சம்பவம்: யாழ் வாசியும், குழந்தையும் விபத்தில் பலி!

Pagetamil

உள்ளூராட்சி தேர்தல் சிறப்பு ஏற்பாட்டு சட்டமூலத்துக்கு எதிரான மனு விசாரணைக்கு ஏற்பு!

Pagetamil

Leave a Comment