A9 வீதியில் பயங்கர விபத்து!

Date:

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்துள்ளது. குறித்த சம்பவம் இன்று மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இத்தாவில் பகுதியில் A9 வீதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வவுனியாவிலிருந்து பயணித்த ஊழியர் சேவை பேருந்து முச்சக்கரவண்டியுடன் மோதியதில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

ஒரே திசையில் பயணித்த பேருந்தின் முன் சென்ற முச்சக்கரவண்டி சடுதியாக வீதியின் குறுக்காக திரும்பி கிராமத்துக்கு செல்ல முற்பட்ட வேளை பேருந்து மோதியுள்ளது.

சம்பவத்தில் முச்சக்கரவண்டி பாரிய விபத்தில் சிக்கியது. சம்பவத்தில் எவருக்கும் எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என பொலிசார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை பளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

நிதியமைச்சர் ஆனார் செங்கோட்டையன்: முதல்வர் விஜய், 9 அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு

தமிழக அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் செங்கோட்டையனுக்கு...

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட மேலதி வரி குறித்து விளக்கம்!

வாகன இறக்குமதி மீது விதிக்கப்பட்டுள்ள 50% மேலதிக வரி (Surcharge) குறித்து...

“என் பிள்ளைகளை பார்க்க விடுவதில்லை…” – கலங்கிய ரவி மோகன் கூறியது என்ன?

“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்