சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வாள்கள் பொலிசாரால் மீட்கப்பட்டன.
இணுவில் அண்ணா மைதானத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வாள்களை அவதானித்தவர்கள், பொலிசாருக்கு வழங்கிய தகவலையடுத்து இன்று வாள்கள் மீட்கப்பட்டன.
அண்மையிலும், இந்த பிரதேசத்தில் வாள்கள் மீட்கப்பட்டிருந்தன.
ஆவா குழு ரௌடிகளின் வாள்கள் என கருதப்படுகின்றன.



