இணையவழி கற்பித்தல் நடவடிக்கைகளை நிறுத்துமாறு ஆசிரியர்களை யாராவது மிரட்டினால் பொலிசாரிடம் முறையிடுமாறு பொலிசார் அறிவுறுத்தியுள்ளனர்.
குற்றப் புலனாய்வுத் துறையிலோ அல்லது 119 மூலமாகவோ அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்திற்குச் சென்று முறைப்பாடு அளிக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.
பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர, இது தொடர்பான முறைப்பாடுகள் மீது சட்டத்தை கடுமையாகவும் உடனடியாகவும் அமல்படுத்துமாறு சிஐடிக்கு அறிவுறுத்தியுள்ளார்.
அரசு அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்துவது கிரிமினல் குற்றமாகும் என பொலிசார் தெரிவித்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1