குமார் பொன்னம்பலத்தின் கோரிக்கைக்கு அமைய, கொழும்பிலுள்ள அவரது வீட்டிற்கு புளொட் உறுப்பினர்கள் பாதுகாப்பு அளித்த தகவலை, அந்த அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன் வெளியிட்டுள்ளார்.
இன்று யாழில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.
“என்னை விசாரிக்க வேண்டுமென கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறுவதில் ஒரு நியாயம் உள்ளது. அவரிடம் எங்களைப்பற்றிய ஒரு ஆதாரமுள்ளது. அவரது தந்தையார் குமார் பொன்னம்பலம் எம்மை தொடர்பு கொண்டு, எந்த தரப்பாலோ தமக்கு உயிராபத்து உள்ளது, அதனால் எமது அங்கத்தர்கள் சிலரை அனுப்பி தமது வீட்டுக்கு பாதுகாப்பு தரும்படி கேட்டிருந்தார். எங்கள் அங்கத்தவர்கள் அவர்களது வீட்டுக்கு பாதுகாப்பு வழங்கினார்கள். அப்பொழுது சின்னப்பொடியனாக அதையெல்லாம் பார்த்து வளர்ந்தவர் கஜேந்திரகுமார். தனது தந்தையுடன் சேர்ந்து இவர்கள் சட்டவிரோதமாக ஏதோ செய்கிறார்கள் என அப்போது அவருக்கு விளங்கியிருக்கவில்லை, இப்பொழுது விளங்கி, விசாரணை கோருகிறார் என நினக்கிறேன்“ என்றார்.