நாட்டில் நிலவும் அராஜகத்திற்கு ரத்வத்தையின் செயல் சான்று!

Date:

அநுராதபுரம் சிறைச்சாலையில் அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சர் ஒருவர் மேற்கொண்டு இழிவான மற்றும் சட்டவிரோதமான நடவடிக்கை கண்டிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.

இவ்வாறான செயலில் ஈடுபட்ட அந்த நபரை அமைச்சு பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தனது முகநூல் பக்கத்தில் தமிழ் – சிங்கள – ஆங்கில மொழிகளில் பதிவொன்றை இட்டுள்ளார்.

“அநுராதபுரம் சிறைச்சா​லைக் கட்டடத் தொகுதியில் அரசாங்க அமைச்சரின் இழிவான மற்றும் சட்டவிரோதமான நடத்தையை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

இந்தக் கேவலமான சட்டவிரோத செயல் நமது நாட்டின் அராஜக நிலைக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும். எங்கள் தாய்நாட்டில் வாழும் அனைத்து குடிமக்களின் மனித உரிமைகளை பாதுகாப்பதில் இந்த அரசாங்கத்துக்கு கடப்பாடு உள்ளது.

இந்த சட்டவிரோதமான மற்றும் கேவலமான செயல் நமது நாட்டில் மனித உரிமைகளின் நிலைமை வேகமாக குறைந்து வருவதற்கு மற்றொரு எடுத்துக்காட்டாகும். இந்த அமைச்சரை உடனடியாக பதவியில் இருந்து நீக்குமாறு நான் ஜனாதிபதியை கேட்டுக் கொள்கின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

நிதியமைச்சர் ஆனார் செங்கோட்டையன்: முதல்வர் விஜய், 9 அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு

தமிழக அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் செங்கோட்டையனுக்கு...

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட மேலதி வரி குறித்து விளக்கம்!

வாகன இறக்குமதி மீது விதிக்கப்பட்டுள்ள 50% மேலதிக வரி (Surcharge) குறித்து...

“என் பிள்ளைகளை பார்க்க விடுவதில்லை…” – கலங்கிய ரவி மோகன் கூறியது என்ன?

“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்