தென்மராட்சியில் நேற்றிரவு விபத்து: இளைஞன் பலி!

Date:

தென்மராட்சி, மீசாலை பகுதியில் நேற்று (14) இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்தார்.

நேற்று இரவு 9.30 மணியளவில், மீசாலை, புத்தூர் சந்தி பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.

மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞன் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதியது. இதில்  24 வயதான ராஜன் சிந்துஜன் (24) என்ற, மீசாலையை சேர்ந்த இளைஞன் உயிரிழந்தார்.

அவரது சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு நண்பர்கள், உறவினர்கள் என பெருமளவானவர்கள் திரண்டதை தொடர்ந்து பதற்றமான நிலைமையேற்பட்டது. பின்னர் பொலிசார் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுப்படுத்தப்பட்டு, சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டது.

spot_imgspot_img

More like this
Related

சதொசவில் 18 அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலைகள் குறைப்பு

மத்திய கிழக்கில் நிலவிவரும் பதற்றங்கள் காரணமாக உலகச் சந்தைகளில் விலை உயர்வு...

மோசடி யுவதி கைது!

அங்கீகரிக்கப்பட்ட வர்த்தக நாமம் ஒன்றை போலியாகப் பயன்படுத்தி, இணையதளம் மூலம் அதிக...

மரமுந்திரி தோட்டத்தில் ஒருவர் சுட்டுக்கொலை

வாயுத் துப்பாக்கியால் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 08 சந்தேக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்