24.7 C
Jaffna
January 29, 2025
Pagetamil
இலங்கை

நாமல், அங்கஜன் பார்வையிட்டு சென்ற பிள்ளையார் கோயில் குளத்திற்கு பௌத்த கொடியிலுள்ள வர்ணம் தீட்டல்: இடைநிறுத்தியது யாழ் மாநகரசபை!

யாழ் பொஸ்கோ பாடசாலைக்கு அருகாமையில் உள்ள மாநகர சபைக்கு சொந்தமான பிள்ளையார் குளத்தைச் சுற்றி தீட்டப்படும் வர்ணங்கள், பௌத்த கொடிகளில் காணப்படும் வர்ணங்களை ஒத்தவை என பிரதேச மக்கள் அதிருப்தி தெரிவித்ததையடுத்து, அந்த வர்ணங்கள் நீக்கப்பட்டு வேறு வர்ணங்கள் பூசப்படவுள்ளது.

உலக வங்கியின் நிதி அனுசரணையுடன் மீளப் புனரமைக்கப்பட்டு வருகின்ற குளத்தின் சுற்று கம்பங்களுக்கு தீட்டப்பட்ட வர்ணங்களே சர்ச்சையாகியது.

1996 ஆம் ஆண்டு 1.51(0.6063) ஏக்கராக இருந்த குளததின் பரப்பளவு 2013 ஆண்டு மீள அளக்கப்பட்ட நிலையில்1.26(0.5078) ஏக்கராக குறைவடைந்துள்ளது.

இவ்வாறான நிலையில் குறித்த குளம் தற்போது புனரமைக்கும் போது குளத்திலிருந்து தூர்வாரப்பட்டு மண்ணை மீண்டும் குளத்தின் சுற்றுப்புறங்களில் கொட்டியதாக குற்றச்சாட்டுகளும் எழுந்தது.

இன் நிலையில் யாழ்மாவட்டத்தில் இடம்பெறும் அபிவிருத்திகள் தொடர்பில் கள ஆய்வுகளை மேற்கொள்வதற்காக கடந்த வாரம் அமைச்சர் நாமல் ராஜபக்ச, அங்கஜன் இராமநாதன் உள்ளிட்ட குழுவினர் அந்த பகுதிக்கு விஜயம் செய்திருந்தார்.

இந்த குழுவினர் பார்வையிட்டு சென்ற நிலையில் ஆரம்பிக்கப்பட்ட பணியிலேயே இவ்வாறு வர்ணம் பூசப்பட்டது.

அந்த வர்ணங்கள் தொடர்பாக பிரதேச மக்களால் யாழ் மாநகரசபை முதல்வரிற்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, நேற்று நகர அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளை தொடர்பு கொண்டு யாழ் மாநகரசபை முதல்வர் பேசியிருந்தார்.

குள புனரமைப்புக்காக அந்த பகுதி மக்களை உள்ளடக்கிய குழு நியமிக்கப்பட்டது என்றும், அந்த குழுவின் சம்மதம் பெற்ற வர்ணங்களே தீட்டப்பட்டது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து, அந்த வர்ணம் தீட்டும் பணியை இடைநிறுத்துமாறு கேட்டுக் கொண்டார். இதையடுத்து, அந்த வர்ணங்கள் இடைநிறுத்தப்பட்டு, வேறு வர்ணங்கள் தீட்டப்படவுள்ளன.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

டக்ளசின் வாகனத்தில் ஐஸ் போதைப்பொருள்: உதவியாளர் கைது

east tamil

நிதி சிக்கலுக்குப் பின் துறைமுக புதைகுழி அகழ்வு மீண்டும் ஆரம்பம்

east tamil

கடந்த ஆண்டில் சிறுவர்கள் தொடர்பாக 8746 முறைப்பாடுகள் பதிவு – சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை

east tamil

பண்டத்தரிப்பில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழா

east tamil

Update – மாவை. சேனாதிராஜா அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

east tamil

Leave a Comment