28.1 C
Jaffna
December 10, 2024
Pagetamil
இலங்கை

மதுபோதையில் தள்ளாடியபடி சிறைக்கு சென்ற அமைச்சர்!

சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை மதுபோதையில், நண்பர்கள் சிலருடன் வெலிக்கடை சிறைச்சாலை தலைமையகத்துக்குள் நுழைந்து, அங்கிருந்த அதிகாரிகள் சிலரை தகாத வார்த்தைகளால்  திட்டிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 6 ஆம் திகதி, நடக்கக் கூட முடியாத நிலையில் போதையில் தள்ளாடிய வண்ணம், இராஜாங்க அமைச்சரும் அவரது கூட்டாளிகளும் வெலிக்கடை சிறைச்சாலை வளாகத்துக்குள் சென்றுள்ளனர்.

சிறைச்சாலை தூக்குமேடையை காண்பிக்கவே நண்பர்களுடன் இராஜாங்க அமைச்சர் அங்கு வந்துள்ளதாக அவரது நடவடிக்கைகளில் தெரிந்ததாக சிறைச்சாலை அதிகாரிகள் கூறினர்.

குடிபோதையில் வந்த இராஜாங்க அமைச்சரின் குழுவில் பலர் கட்டை காற்சட்டை அணிந்திருந்தனர். முழுமையான ஆடை அணியாமை, மதுபோதை போன்ற காரணங்களால் அவர்கள் உள்ளே நுழைவதை சிறை அதிகாரிகள் தடுத்துள்ளனர். இதன்போது இராஜாங்க அமைச்சர் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா காலமானார்

Pagetamil

விரைவில் டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரங்கள்

Pagetamil

திருகோணமலையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் பேரணி

east pagetamil

கபில சந்திரசேன, உதயங்க வீரதுங்க மீது அமெரிக்கா தடைகளை விதித்தது!

Pagetamil

‘என்னை சேர் என்றுதான் அழைக்க வேண்டும்’: யாழ் வைத்தியசாலைக்குள் அர்ச்சுனா அட்டகாசம்!

Pagetamil

Leave a Comment