Pagetamil
இலங்கை

2 நாட்களாக ரூம் போட்டு பெண்ணை தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தர் கைது!

கொழும்பு பிலியந்தலையிலுள்ள விடுதியொன்றில் இரண்டு நாட்களாக ஒரு பெண்ணை அடைத்து வைத்து கொடூரமாக தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாராளுமன்ற கடமையில் இணைக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரே கைது செய்யப்பட்டுள்ளார்.

அப்பகுதியில் வசிப்பவர்கள் 119 அவசர இலக்கத்திற்கு அளித்த முறைப்பாட்டையடுத்து, பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காயமடைந்த பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பொலிஸ் உத்தியோகத்தர் திருமணமாகாதவர். தாக்கப்பட்ட பெண் திருமணமானவர். ஆண் என்றும் பொலிசார் தெரிவித்தனர்.

இருவரும் அறிமுகமான பின்னர் பொலிஸ் உத்தியோகத்தர் பிலியந்தல பகுதியில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்து அந்த பெண்ணுடன் தங்கியிருந்துள்ளார்.

சந்தேகநபர் அந்த பெண்ணுடன் இரண்டு நாட்கள் தங்கியிருந்துள்ளார். அந்த பெண்ணை கழிப்பறைக்கு செல்லவும் அனுமதிக்கவில்லையென்றும், கடுமையாக தாக்கப்பட்ட பெண்ணின் மூக்கு மற்றும் உடலின் பல பாகங்களில் பலத்த காயமடைந்ததாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

கல்கிசை: ஆயுததாரிகளின் துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழப்பு

east tamil

வடக்கு கிழக்கில் புராதன பௌத்த தளங்களை பாதுகாக்க விசேட திட்டங்கள் – புத்தசாசன அமைச்சர்

east tamil

துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

Pagetamil

இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

Pagetamil

புதிய வடிவில் TELL IGP மற்றும் l-need சேவைகள்

Pagetamil

Leave a Comment